போதைப்பொருளுடன் இளைஞன் கைது

83 0

கடந்த 02ஆம் திகதி ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்ட இளைஞன் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்  என தெரியவந்துள்ளதாக மேல்மாகாண வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க, ஹுனடியன பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞனே பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

இந்த இளைஞன் சீதுவை பிரதேசத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி இருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை , நீர்கொழும்பு பிரதேசத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி நபரொருவரை சுட்டுக்கொலை செய்தல், மினுவாங்கொடை பத்தடுவன பிரதேசத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி நபரொருவரை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தல் ஆகிய சம்வபவங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.

இந்த இளைஞனிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவலின் பேரில், மினுவாங்கொடை பத்தடுவன பிரதேசத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 06 ஆம் திகதி நபரொருவரை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய  பிரதான சந்தேக நபர்களுக்கு உதவி செய்ததாக கூறப்படும் வயோதிபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மினுவாங்கொடை பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடைய வயோதிபர் ஆவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல்மாகாண வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.