கிளிநொச்சி மாவட்டத்தின் 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது!

118 0

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தின் 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.

இதற்கமைய பச்சிளைப்பள்ளி பிரதேச சபை, கரைச்சி பிரதேச சபை மற்றும் பூநகரி பிரதேச சபை ஆகிய 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

கரைச்சி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 20,962 வாக்குகளைப் பெற்று 20 உறுப்பினர்களையும் பச்சிளைப்பள்ளி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 3,040 வாக்குகளைப் பெற்று 6 உறுப்பினர்களையும் பூநகரி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 5,171 வாக்குகளைப் பெற்று 10 உறுப்பினர்களையும் பெற்றுள்ளது.