முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று புதன்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளார்.
கெஹெலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் இன்றைய தினம் முன்னிலையாகிய போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கெஹெலிய ரம்புக்வெல்லவை கொழும்பு பிரதான நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

