பின்னர் ஜனாதிபதி மாளிகையில் உள்ள ஹோ சி மின் நினைவிடத்தை பார்வையிட்டதுடன், சுதந்திரப் போராட்டத் தலைவரும், சுதந்திர வியட்நாமின் முதல் ஜனாதிபதியுமான ஹோ சி மின் இன் அஸ்தி அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் கலந்து கொண்டார்.



