
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜின் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலின் போது இலங்கை கடற்பரப்பில் வைத்து இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யபடுவது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்தொழிலாளர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பில் புதுச்சேரி முதல்வர் வீ.நாராயனசுவாமி, இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.