பொருளாதார முகாமைத்துவத்துக்கு அமைச்சரவையால் விசேட குழு நியமனம்

97 0

பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவை நிறுவத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நடுத்தரக்கால வேலைச்சட்டகத்தின் மொத்தத் தேசிய உற்பத்தியின் 5 சதவீதத்திற்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு அரசு எதிர்பார்க்கின்றது.

நிலைபெறுதகு அபிவிருத்தி மற்றும் பொருளாதார உறுதிப்பாட்டை அடைவதற்காக முதலீடுகளுக்கு நேயம்மிக்க கொள்கை வகுப்புக்கள், உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி மற்றும் ஏற்றுமதிப் பன்முகப்படுத்தல்கள்மீது அரசு கவனம் செலுத்தியுள்ளது.

ஆயினும், கடந்த சில தசாப்தங்களாக தனியார் முதலீடுகள் குறைந்த மட்டத்தில் காணப்பட்டமையால், மற்றும் அரசின் முதலீடுகள் மொத்தத் தேசிய உற்பத்தியின் 4 – 5 சதவீதமாக மாத்திரம் இருக்கின்றமையால், எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு தனியார் முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, வினைத்திறன் மற்றும் தேசிய பொருளாதார நோக்கங்கள் மீது கவனம் செலுத்துவதை உறுதிப்படுத்தி பொருளாதார அபிவிருத்தி தொடர்பான கொள்கைக் கலந்துரையாடல்கள் மேற்பார்வை மற்றும் அவற்றுக்கான வசதிப்படுத்தல்களுக்கு பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவை நிறுவுவதற்கு ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.