மட்டக்குளி பொலிஸ் பிரிவின் கெமுனுபுர பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இன்று செவ்வாய்க்கிழமை (22) சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடமிருந்து 10 கிராம் 800 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பில் மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

