பாப்பரசர் பிரான்ஸிஸிக்கு பௌத்த குருமார்கள் பிரார்த்தனையுடன் அஞ்சலி !

91 0
நித்திய இளைப்பாறுதல் அடைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸுக்கு பனகல உபதிஸ்ஸ தேரர் தலைமையிலான பௌத்த மத குருமார்கள் குழு பிரர்த்தனையும்  அஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு காரணமாக தனது 88 வயதில் நேற்று திங்கட்கிழமை (21) நித்திய இளைப்பாற்றுதல் அடைந்தார்.

அவரின் மறைவுச்  செய்தி  வெளியாகி சில மணி நேரங்களுக்குப் பின்னர் கம்பஹா,  மக்கோல பகுதியிலுள்ள விகாரையில் பாப்பரசர் பிரான்சிஸுக்கு மலர் அஞ்சலி செலுத்தி பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.