பல பகுதிகளுக்கு கடும் மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

112 0
கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடக்கு மாகாணங்கள் மற்றும் அம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கு கடும்  மின்னல் ஏற்படும் என வளிமண்டலிவியல் தணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கையானது இன்று செவ்வாய்க்கிழமை (22)  இரவு 11:00 மணி வரை அமலில் இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.

பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.