சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது!

89 0
நாட்டின் இருவேறு பகுதிகளில்  நேற்று வியாழக்கிழமை (17)  பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட  சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜா-எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்த மெதிவ் மாவத்தை பகுதியில்  சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவராவார்.

சந்தேகநபரிடமிருந்து 15 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, மாங்குளம் பொலிஸ் பிரிவின் புளியங்குளம் பகுதியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒலுமடு – மாங்குளம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவராவார்.

சந்தேகநபரிடமிருந்து   21 லீற்றர் சட்டவிரோத மதுபானம் மற்றும் 90 லீற்றர்  கோடா என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.