2020ம் ஆண்டில் வசதியான பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும்

223 0

ஏற்றுமதி சந்தை ஒன்றை உருவாக்குவதனூடாகவே நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தியடையச் செய்ய முடியும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.

செலுத்த வேண்டியுள்ள கடன் அளவை செலுத்தி முடிப்பதற்காக இந்த ஏற்றுமதி பொருளாதார முறை மிகவும் உதவியாக இருக்கும் என்று பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

2020ம் ஆண்டாகும் போது இலகுவான முறையில் கடன்களை செலுத்துவதற்கு வசதியான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியுள்ளார்.