நாட்டின் பல பிரதேசங்களில் இன்று இடியுடன் கூடிய மழை

220 0

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களில் 75 மில்லி மீட்டர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

மழையுடன் மின்னல் தாக்கம் ஏற்படுமானால் அது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.