தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் 38 ஆவது வயதில் காலமானார் !

124 0
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) காலமானார்.

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கோசல நுவன் திடீர் மாரடைப்பினால் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார்.

பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் தனது 38 வயதில் காலமானார்.