இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி – கேணிநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
யாசகம் பெற்று வாழ்ந்து வரும் 65 வயது மதிக்கத்தக்க தாய் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனது தாயுடன் வாழ்ந்து வந்த 46 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட மகன் தாக்கி குறித்த தாய் மரணமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் சந்தேகத்தில் மகனை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.