கைது செய்யப்பட்டவர், கம்பஹா, கிடகம்முல்ல பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடையவர் ஆவார்.
பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி போலியான பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்து பண மோசடியில் ஒருவர் ஈடுபட்டு வருவதாக யக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவாகியுள்ளது.
இதனையடுத்து, குறித்த சந்தேக நபர் கடுகன்னாவ பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் தலைமறைவாகியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சனிக்கிழமை (05) யக்கல பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கரையான் உள்ளிட்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்தப் பயன்படும் பூச்சிக்கொல்லி அடங்கிய கொள்கலன்களில் போலியான பூச்சிக்கொல்லிகளை அச்சிட்டு விநியோகித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த போலியான பூச்சிக்கொல்லி மருந்துகள், கிரி எல்ல, களனி, பமுனுகம, அவிசாவளை, ரம்புக்கன, மல்வத்துஹிரிபிட்டிய, கண்டி, வாதுவ, கொச்சிக்கடை, சபுகஸ்கந்த, தலாத்துஓயா, மொரட்டுமுல்ல, மாவத்தகம உள்ளிட்ட பல பிரதேசங்களில் விற்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் 40 இலட்சம் ரூபாய் பண மோசடி குறித்த விற்பனையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யக்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

