மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும்: முதல்வர் பழனிச்சாமி

257 0

தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும் என்று முதல்- அமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மதுரையில் நேற்று (5) மாலை நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 2 மேம்பாலங்களை திறந்து வைத்தார். மதுரையில் சித்திரை திருவிழா தொடங்கி நடந்து வரும் நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், இந்த புதிய மேம்பாலங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் எடப்பாடி பழனிச்சாமி ரூ. 22.25 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது, தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும் என்று முதல்- அமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அடுத்த 3 ஆண்டுகளில் ஆற்றில் மணல் அள்ளப்படுவது முற்றிலும் நிறுத்தப்படும்.

ஆற்று மணலுக்கு பதிலாக மக்கள் எம். சாண்டை பயன்படுத்த வேண்டும். மணல் அள்ளுவது நிறுத்தப்பட்டால் நிலத்தடி நீர் உயரும். மணல் சேமிப்பையும், மணல் அள்ளுவதையும் அரசே ஏற்று நடத்தும். நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக விழாவில், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை தாங்குகிறார். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜூ, சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், மாநகராட்சி கமி‌ஷனர் சந்தீப் நந்தூரி ஆகியோர் வரவேற்று பேசினர்.