கடைக்குள் குட்டிகளுடன் நுழைந்த தாய்ப் பன்றி..!

89 0

அட்டன் திம்புள்ள வீதி வர்த்தக ஸ்தாபனம் ஒன்றில்  தாய்ப்பன்றியொன்று தனது குட்டிகளுடன் நுழைந்த சம்பவம் சனிக்கிழமை (29) மாலை இடம்பெற்றுள்ளது.

அட்டன் திம்புள்ள வீதி பல சரக்கு கடை ஒன்றினுள் அதன் உரிமையாளர் இருக்கையில் மாலை 6.30. மணியளவில் தனது ஏழு குட்டிகளுடன் தாய்ப் பன்றி ஒன்று திடீரென  நுழைந்துள்ளது.

இதையடுத்து பதற்றமடைந்த கடை உரிமையாளர் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்ப நிலையை அடைந்துள்ளார். பின்பு கடையின் பின்பக்கமாக சென்ற தாய்ப்பன்றி தனது குட்டிகளுடன் மீண்டும் கடை முன் பக்கமாக வெளியேறியுள்ளது.

அட்டன் நகரின் பல இடங்களிலும் கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் கிடப்பதால் இப்போது பகல் நேரங்களிலும் காட்டுப் பன்றிகள் தாராளமாக நகரின் ப ல இடங்களில் சுற்றி திரிவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.