சீனாவுக்கு வடகொரியா எச்சரிக்கை

242 0

சீனா ‘எச்சரிக்கை எல்லையை’ மீறி செயற்படுவதாக வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

பல்வேறு உலக நாடுகளின் கண்டனத்துக்கு உள்ளான வடகொரியாவுடன், சீனா கடந்த காலங்களி;ல் ஒத்துழைத்து செயற்பட்டு வந்துள்ளது.

எனினும் அண்மைக்காலமாக வடகொரியாவின் செயற்பாடுகளை சீனா விமர்சித்து வருகிறது.

இந்த நிலையில், சீனா, அமெரிக்காவின் தாளத்துக்கு ஆடி வருவதாக, வடகொரிய அரசாங்கத்தை மேற்கோள்காட்டி அந்த நாட்டின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் தென்கொரியாவில் அமெரிக்கா தமது பாதுகாப்பு தளத்தை உருவாக்க சீனா உதவியளிப்பதாகவும் வடகொரியா குற்றம் சுமத்தியுள்ளது.

எந்த அழுத்தங்களாலும் வடகொரியா தமது அணுவாயுத வேலைத்திட்டத்தை இடைநிறுத்தப் போவதில்லை என்றும் அந்த செய்தியில் அறிவிக்கப்பட்டுள்ளது.