காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலை, அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும்- காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்(காணொளி)

378 0

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலை, அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் வவுனியாவில் சுழற்சி முறையில் உண்ணாவிரதப்போராட்டம் இன்று 70ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இத் தொடர்ச்சியான போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை வனிதா, வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குரல் அமைப்பின் வன்னி மாவட்டத்தின் இணைப்பாளர் எஸ்.தேவராஜா, நேற்றைய தினம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை ஒரு சிலர் தன்னிச்சையாக ஒரு சிலரின் சொந்த தேவைக்கு பாவிக்க முற்படுவது அப்பட்டமான பாரிய பிழை என்பதுடன், தொடர்ந்து இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமாக இருந்தால் பாதிக்கப்பட்ட இந்த சமூகத்தின் எதிர்காலம் சூனியமாகிவிடும் என்று ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து தொடர்பாக விளக்கமளித்தார்.

எட்டு மாவட்டங்களின் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவிகளும் முதலமைச்சரை சந்தித்து தங்கள் நிலைமைகளை அவருக்கு விளக்கமாக தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்ட எஸ். தேவராஜா இணைப்பாளர் என்று கூறுவதை முற்றுமுழுதாக மறுப்பதாகவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேவராஜா தங்கள் போராட்டத்தை மழுங்கடிப்பதற்காகவே இவ்வாறாக செயற்படுகிறார் எனவும் அவர் குறிப்பிட்டார்.