மீண்டும் அரசியலுக்கு பிரவேசிக்கவிருப்பதாக லொகான் ரத்வத்தை அறிவிப்பு

56 0
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க  அமைச்சருமான லொகான் ரத்வத்தை மீண்டும் அரசியலுக்கு பிரவேசிக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று செவ்வாய்க்கிழமை (18)  இடம்பெற்ற ஊடகசந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

அண்மைய காலங்களில் இலங்கை அரசியலில் பிரபல்யமாகப் பேசப்பட்டு வந்த லொகான் ரத்வத்தை கடந்த தேர்தலில் அமைதியடைந்திருந்த அவர் மீண்டும் அரசியலில் பிரவேசித்துள்ளார்.

உடதலவின்ன 10 கொலைகள் முதல் அனுராதபுரம் சிறைச்சாலையில் திடீர் பிரவேசம், அண்மையில் வாகன மோசடி உட்பட பல சம்பவங்களில் இவர் பிரபல்யமாகப் பேசப்பட்டவர்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பின் இவர் அரசியலில் ஒதுங்கி இருந்தார். தற்போது நடை பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக  அவர் அறிவித்துள்ளார்.