அம்பாறை – மத்திய முகாம் நகரத்தில் நேற்று திங்கட்கிழமை (17) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மத்திய முகாம் பொலிஸார் தெரிவித்தனர்.
வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் மத்திய முகாம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மத்திய முகாம் 06 பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் அம்பாறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய முகாம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

