இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (17) காலை இடம்பெற்றுள்ளது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த கடை மற்றும் மரம் ஒன்றின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நிக்கவெரட்டியவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில், பஸ்ஸில் பயணித்த பயணிகள் மற்றும் கடையிலிருந்த குழந்தை உட்பட 21 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் சிலாபம் மற்றும் முந்தல் ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



