போதைப்பொருள் கடத்தல்காரரான ‘வெலே சுதா’ என அழைக்கப்படும் சமன் குமார என்பவரின் சகோதரனை கைது செய்ய கல்கிஸ்ஸை மற்றும் தெஹிவளை பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
படோவிட்ட பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை (15) கல்கிஸ்ஸை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபரொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ‘வெலே சுதா’ என்பவரின் சகோதரன் என தெரியவந்துள்ளது.
இதன்போது சந்தேக நபர் பொலிஸாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.
பின்னர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை சந்தேக நபரை துரத்திச் சென்று பிடித்துள்ளார்.
இதன்போது சந்தேக நபர் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
தப்பிச் சென்ற சந்தேக நபரை கைது செய்ய கல்கிஸ்ஸை மற்றும் தெஹிவளை பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக உயர் பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

