இலங்கை வர்த்தகரின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பப்பட்டமை குறித்து நெதர்லாந்து ஊழல் விசாரணை

57 0
இலங்கையின் இரண்டு மருத்துவமனைகளில் முன்னெடுக்கப்படும் திட்டங்களில் ஈடுபட்டுள்ள நெதர்லாந்தை சேர்ந்த சுகாதார நிறுவனம், பிரிட்டிஸ் வேர்ஜின் ஐலண்டில் பதியப்பட்ட நிறுவனம் ஒன்றின்  ஓவ்ஷோர் கணக்கில் பெருமளவு பணத்தினை  வைப்பிலிடப்பட்டுள்ளமை குறித்து நெதர்லாந்து அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிறுவனத்தின் உரிமையாளர் இலங்கையை சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நெதர்லாந்தின் நிதி புலனாய்வு பிரிவு,  ஊழல் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாககுறிப்பிட்ட நிறுவனத்தின் அலுவலகத்தில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதாக  தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட செய்திக்குறிப்பு விசாரணைகளில் சிக்குண்டுள்ள இரண்டு நிறுவனங்களின் பெயர்களை தெரிவிக்கவில்லை.

எனினும் நெதர்லாந்தின் என்ற நாளேடு என்ராவ் நோனியஸ்,ஏகேஎம் இன்டநஷனல் புரொஜெக்ட் டிவலப்மென்ட் என்ற இரண்டு நிறுவனங்கள் குறித்தே விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளது.

இது குறித்த விபரங்களை நெதர்லாந்தின் நாளேடு சண்டே டைம்சுடன் பகிர்ந்துகொண்டுள்ளது.

அம்பாந்தோட்டை நுவரேலியாவில் மருத்துவமனை திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் 2011 இல் கொழும்பில் சுகாதார அமைச்சுக்கும் ஈஎன் புரொஜெக்டிற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்தானமை குறிப்பிடத்தக்கது.

ஈஎன் புரொஜெக்ட் என்பது நெதர்லாந்தின் என்ரால் நொனியஸ் நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனமாகும்.

கிரிஸ் டிரான்ஸ்வோர் நிறுவனத்திற்கு கொழும்பில் நிலத்தை குத்தகைக்கு வழங்கியதில் இடம்பெற்றிருக்ககூடிய மோசடியை விசாரணை செய்யும்போது இலங்கையின் நிதி குற்றங்கள் தொடர்பான விசாரணை பிரிவு சப்ரே விசன் ஹோல்டிங்ஸ் என்ற பிரிட்டிஸ் வேர்ஜின் ஐலன்ட் நிறுவனத்தின் சிங்கப்பூர் வங்கி கணக்கில் மிகப்பெருமளவு பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதை கண்டுபிடித்தது தொடர்பில் சண்டே டைம்ஸ் அம்பலப்படுத்தியிருந்தது.

இது தொடர்பான ஆவணங்கள் சப்ரே விசன் ஹோல்டிங்ஸ் என்ற பிரிட்டிஸ் வேர்ஜின் ஐலன்ட் நிறுவனத்தின் ஆதாய உரிமையாளர் – வங்கிகணக்கின் உரிமையாளர் , பங்கு சந்தை குரு என தன்னைதானே தெரிவித்துக்கொள்ளும் வண்ணக்கவட்டவடுகே டொன் நிமால் ஹெமாசி பெரேரா என்பதை உறுதிப்படுத்தியிருந்தன.

2012 முதல் ஆகஸ்ட் 21 முதல் ஒக்டோபர் 31ம் திகதி வரை சப்ரே விசன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் கணக்கில் பல முறை பணம் வைப்பிலிடப்பட்டது என்பதை ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

ஜேர்மனி நிறுவனமொன்றின் ஜேர்மன் வங்கிகணக்கிற்கும்,அவுஸ்திரேலிய நிறுவனமொன்றிலிருந்துஅவுஸ்திரேலிய நியுசிலாந்து வங்கிகளிற்கும் பணம் அனுப்பப்பட்டமை அவ்வேளை ஆவணங்கள் மூலம்தெரியவந்தது.

நெதர்லாந்தை சேர்ந்த என்ராவ் நோனியஸ் நிறுவனம் நெதர்லாந்தில் உள்ள ரபோ வங்கியின் வங்கி கணக்கில் பணத்தை வைப்பிட்டமையும் தெரியவந்தது.

2019 இல் இலங்கை அதிகாரிகள் இது குறித்த விபரங்களை தருமாறுநெதர்லாந்து சிங்கப்பூர் அதிகாரிகளை கேட்டிருந்தனர்.

தற்போது இந்த இரண்டு நிறுவனங்களும் ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிப்பதாக தெரிவித்துள்ள  நெதலாந்தின் நிதி புலனாய்வு மற்றும் விசாரணை சேவை இந்த நிறுவனங்களின் தடை செய்யப்பட்ட நடவடிக்கைகள் மூலம் நால்வர் பயனடைந்தனர் என சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளது.