கார் குடை சாய்ந்து விபத்து

64 0
கண்டியில் இருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற கார் ஒன்று இன்று திங்கட்கிழமை (17) ஹட்டன், குயில்வத்தை பிரதேசத்தில் விபத்திற்குள்ளாகியுள்ளது.

மேற்படி வாகனத்தில் சாரதி மட்டும் இருந்துள்ளமையல் பாரிய ஆபத்துக்கள் இன்றி அவர் தப்பியுள்ளார். சுமார் 30 அடி பள்ளத்தில் தலை கீழாக மேற்படி வாகனம் குடை சாய்ந்துள்ளது. இதன் காரணமாக வாகனத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

வாகனத்தின் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து  தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.