மற்றுமொரு குப்பை மேடு சரிந்து விழும் அபாயம் : 12 குடும்பங்களை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு.!

292 0

பண்டாரவளை கலமடுகஸ்தன்ன குப்பை மேடு சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குப்பை மேட்டை அண்மித்து வாழும் குடும்பங்களை உடனடியாக பிரதேசத்தை விட்டு வெளியேறுமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரித்துள்ளது.  கண்டி – கொஹாகொட குப்பை மேடு அபாயம் உள்ள நிலையில் அப்பகுதியில் கனமான  குப்பைகளை கொட்டவும் தவிர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

பண்டாரவளை பிரதேச சபைக்கு உட்பட்ட 15 பிரதேசங்களின் குப்பைகளும் கொட்டப்படும்  கலமடுகஸ்தன்ன குப்பை மேட்டில் கொட்டப்படுகின்றது.  நீண்ட காலமாக இப்பகுதியில்  குப்பைகள்  கொட்டப்பட்டு வரும் நிலையில் குப்பை மேட்டை சுற்றி 30 அடி உயர சீமெந்து சுவர் எழுப்பும்பட்டுள்ளது. எனினும் தற்போது கலமடுகஸ்தன்ன குப்பை மேட்டின் குப்பைகளின் கனம்  அதிகரித்துள்ள நிலையில்  குப்பை மேட்டை சுற்றி அமைக்கப்பட்டுள்ள சுவரில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதனை அடுத்து குப்பை மேட்டை அண்மித்து வாழும்  12 குடும்பங்களை உடனடியாக உரிய பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என பண்டாரவளை பிரதேச சபை தெரிவித்துள்ளது.