கெக்கிராவையில் வலம்புரிச் சங்குடன் இருவர் கைது

88 0
அநுராதபுரம் – கெக்கிராவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சூரியகம பிரதேசத்தில் வலம்புரிச் சங்குடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (11) காலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தம்புள்ளை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கெக்கிராவ பிரதேசத்தில் வசிக்கும் 34 மற்றும் 39 வயதுடையவர்கள் ஆவர்.

இதனையடுத்து, சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணகைளுக்காக கணேவல்பொல வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.