வெளிநாட்டு சிகரட்டுகளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

78 0

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வலான ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த வேன் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து 18,600 வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டதாக வலான ஊழல் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வலான ஊழல் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.