பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு உதவி செய்பவர்களைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
இன்று செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில்,
எனவே, குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு உதவி செய்பவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்படுவார்கள்.
இவ்வாறு கைது செய்யப்படும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

