அவிசாவளை பகுதியில் ஹெரோயின், வாள்களுடன் சந்தேகநபர் கைது!

85 0

அவிசாவளை பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் மேல் தல்துவ பகுதியில் சோதனை மேற்கொண்ட போது, ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வாள்களுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று சனிக்கிழமை (08) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தல்துவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய  நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 15 கிராம் 24 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும்  02 வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும்,இந்த சம்பவம் தொடர்பில்  அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.