கோடாவுடன் சந்தேக நபர் கைது !

110 0
பமுனுகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜென்னிவத்த பகுதியில்  பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 6,993 லீற்றர் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று சனிக்கிழமை (08) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஜென்னிவத்த , பூகொடை  பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

மேலும்,  இந்த சம்பவம் தொடர்பில் பமுனுகம பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.