ரக்ன லங்கா நிறுவனத்தை நீக்க முடிவு

228 0

பாது­காப்பு அமைச்சின் முன்­னேற்ற மீளாய்வு கூட்டம் பாது­காப்பு அமைச்­ச­ரான ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்று முற்­பகல் பாது­காப்பு அமைச்சு கேட்­போர்­கூ­டத்தில் நடை­பெற்­றது.

சிவில் பாது­காப்பு திணைக்­களம், மாணவர் படை­யணி, தேசிய பாது­காப்பு கல்வி நிறு­வனம், ஜோன் ­கொத்­த­லா­வல பாது­காப்பு பல்­க­லைக்­க­ழகம், ஆராய்ச்சி மற்றும் அபி­வி­ருத்தி நிலையம், கரை­யோர பாது­காப்பு திணைக்­களம், ரக்ன லங்கா நிறு­வனம் உள்­ளிட்ட அமைச்சின் கீழ் உள்ள நிறு­வ­னங்­களின் செயற்­பா­டுகள் மற்றும் எதிர்­கால திட்­டங்கள் தொடர்பில் இதன்­போது விரி­வாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

கட­லோர பாது­காப்பு சேவையில் இருந்து ரக்ன லங்கா மற்றும் லங்கா லொஜிஸ்டிக் நிறு­வ­னங்­களை நீக்க பாது­காப்பு அமைச்சு தீர்­மா­னித்­துள்ள அதே­வேளை பாது­காப்பு படை­யி­ன­ருக்­காக காணி வழங்­குதல் தொடர்­பாக விசேட கவனம் செலுத்­தவும் கூட்­டத்தில் முடி­வு­செய்­யப்­பட்­டுள்­ளது.

ரக்ன லங்கா நிறுவனத்தை கலைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஓய்வுபெற்ற படையினரின் நலன்களுக்காக அந்த நிறுவனத்தை தொடர்ந்தும் நடத்துவது தொடர்பில் முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவன் விஜே­வர்­தன, பாது­காப்பு செய­லாளர் கரு­ணா­சே­ன­ ஹெட்­டி­யா­ரச்சி மற்றும் பாது­காப்பு படை­களின் பிர­தானி உள்­ளிட்ட முப்­படைத் தள­ப­தி­க­ளும் ­தொ­டர்­பு­டைய நிறு­வன தலை­வர்­களும் இக்­க­லந்­து­ரை­யா­டலில் பங்­கு­பற்­றி­யி­ருந்­தனர்.