சம்பூரில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று சுற்றிவளைப்பு

297 0

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் களப்பு பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

நேற்று (03-04-2017) மாலை சம்பூர் பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சம்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புத்திக ராஜபக்ச தலைமையின் கீழ் சென்ற பொலிஸாரினால் அந் நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது

இதன்போது 402 லீற்றர் கோடா மற்றும் 2 பெரல் உள்ளிட்ட மேலும் பல பொருட்களை கைப்பற்றியதுடன், கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்ட நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட பொருட்களும், கைது செய்யப்பட்டவரும் இன்று (04-04-2017) மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.