பெருந்தோட்டத்துறையை மறுசீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – ரணில்

245 0
பெருந்தோட்டத்துறையை மறுசீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாதத்தின் போது, கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுக்குமார் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் வகையிலேயே பிரதமர் இதனை குறிப்பிட்டார்.
தேயிலை மற்றும் இறப்பர் தொழிற்துறையில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படு வருகின்றது.
இது தொடர்பில் அந்த துறை சார்ந்த மக்கள் குழப்ப நிலையில் உள்ளனர்.இது எவ்வாறு மறுசீரமைப்பு செய்யப்படுகின்றது என்ற விளக்க முடியுமா? என வேலு குமார் கேள்வி எழுப்பினார்.அதற்கு பதில் வழங்கிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க,சில பெருந்தோட்டங்கள் லாபமீட்டுகின்றன. சில நட்டம் என கூறி விற்பனை செய்து வருகின்றன.
இந்தநிலையில் அது குறித்து முழுமையான அறிக்கை கோரியிருந்தோம்.அது தற்சமயம் நிறைவு பெற்றுள்ளதாக அறியமுடிகிறது.
 அதன்படியே எதிர்காலத்தில் நாங்கள் தீர்மானிக்க உள்ளோம்.
இந்த விடயம் குறித்து துறை சார் அமைச்சர்கள் மற்றும் பிரதேசத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை மேற்கொள்வோம்.
பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி செய்வதே தங்களது நோக்கம். அதன் மூலம் பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்வதே நோக்கம்.
அத்துடன், வீடு கட்ட 7 பேர்ச் காணி மக்களுக்கு வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.
அதுபோல் நட்டத்தில் இயங்கும் பொருட்தோட்டகளை அந்த பிரதேச மக்களுக்கு சிறு தோட்டம் கொண்டு நடத்த அதனை பகிர்ந்தளிப்பது குறித்தும் பேச்சு வார்த்தைகள் இடம்பெறுகின்றன.
எவ்வாறாயினும் தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதற்கு முன்னர் மக்கள் பிரதிநிதிகள், தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடப்படும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் குறிப்பிட்டார்.