பொலன்னறுவை – இங்குராங்கொட – தியபுபுல பிரதேசத்தில் அதிசக்தி வாய்ந்த மின்கம்பம் ஒன்றில் நேற்றிரவு ஒருவர் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக பல பிரதேசங்களுக்கான மின்சார விநியோகத்தை தடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.பொலன்னறுவை – இங்குராங்கொட, ஜயந்திபுர, வாழைச்சேனை, மற்றும் மனம்பிட்டிய ஆகிய பிரதேசங்களுக்கான மின் விநியோகத்தை தடைசெய்ய மின்சார சபை தீர்மானித்தது.
அவர் தொடர்ந்தும் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
காதல் விவகாரம் காரணமாக பதுளை பிரதேசத்தை சேர்ந்த 20 வயதான இளைஞரே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இங்குராங்கொட காவற்துறை தெரிவித்துள்ளது

