இறுதிக்கட்ட போரின் போது ஜக்கிய நாடுகள் சபை அக்கறையாக செயற்பட்டிருந்தால் தமிழ் மக்களின் உயிரிழப்புக்களை குறைத்திருக்க முடியும்- சி.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

296 0

தமிழ் மக்களுக்கு எதிராக நாட்டில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது ஜக்கிய நாடுகள் சபை அக்கறையாக செயற்பட்டிருந்தால் தமிழ் மக்களின் உயிரிழப்புக்களை குறைத்திருக்க முடியுமென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி இணைப்பு உத்தியோகத்தர் கனி விக்னேஸ்வரனை

வடக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய போது இக் கருத்தை முன்வைத்ததாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஜ.நா.வின் செயற்பாடுகள் மற்றும் தொடர்புகள் மத்திய அரசாங்கத்துடனேயே பேணப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுடனான தொடர்புகள் குறைவாக காணப்படுவதையும் சுட்டிக்காட்டியதுடன் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளுடன்  கலந்துரையாடாமல் வேலைத்திட்ங்களை ஜ.நா மேங்கொள்வது வருந்தத்தக்க செயற்பாடு என்றும் சுட்டிக்காட்டியதாக டக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் . ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

;ஜக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி இணைப்பு உத்தியோகத்தர் கனி விக்னேஸ்வரன் ஜ.நாவின் அலகுகள் யாவற்றையும் ஒன்றினைத்து செயற்படுத்துவது தொடர்பாக ஆராயும் நோக்கில் தம்மைச் சந்தித்துள்ளதாகவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.