அத்துருகிரிய, மாலபே பகுதிகளில் வீடு புகுந்து திருடிய சந்தேகநபர் போதைப்பொருளுடன் கைது!

77 0
அத்துருகிரிய மற்றும் மாலபே பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து திருடிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் 260 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார்.

கடவத்தை அதிவேக வீதியின் நுழைவாயிலில் நடத்தப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடமிருந்து திருடப்பட்ட சில பொருட்கள்  கைப்பற்றப்பட்டுள்ளதுடன்,  சம்பவம் தொடர்பில்  அத்துருகிரிய   பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.