பதுளை, தெமடவெல்லின்ன கிராமத்தில் தொடர்ச்சியாக பெய்த அடைமழையினால் நேற்று சனிக்கிழமை (01) இரண்டு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், மேலும் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளது.
மண்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, மண்சரிவு காரணமாக பதுளை தெமடவெல்லின்ன கிராமத்துக்கு செல்லும் பிரதான பாதையும் முற்றாகத் தடைபட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதன்படி, பதுளை மாவட்டத்தில் கந்தகெட்டிய, பசறை, ஹாலிஎல, பதுளை, ஹப்புத்தளை, மீகஹகிவுல, ஊவா பரணகம மற்றும் சொரணாதொட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




