நானுஓயா – ரதல்லயில் தேயிலை பறிக்கும் போட்டியில் அந்தனி இரேஷா ராஜலட்சுமி முதலிடம்

93 0
மூன்றாவது முறையாக ஹேலிஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின் ஏற்பாட்டின் கீழ் 60 தோட்டங்களில்  பணியாற்றும் 42  தொழிலாளர்களுக்கு இடையிலான சிறந்த தரமான  தேயிலை பறிப்பாளரை தெரிவு செய்யும் போட்டி நானுஓயா – ரதல்ல, தேயிலை மலையில் நேற்று சனிக்கிழமை (01) நடைபெற்றது. இதில் அந்தனி இரேஷா ராஜலட்சுமி முதலிடத்தினை பெற்றுக்கொண்டார்.

20 நிமிடங்கள் வழங்கப்பட்டு, இக்காலப் பகுதிக்குள் கூடுதல் தேயிலை பறிப்பவர் மற்றும் தரமான கொழுந்து பறிப்பவர்  வெற்றியாளராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

இதில் தலவாக்கலை – பெருந்தோட்ட நிறுவத்தின் கீழ் இயங்கும் கிரேட்வெஸ்டன் தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான அந்தனி இரேஷா ராஜலட்சுமி வழங்கப்பட்ட நேரத்தினை சரிவர பயன்படுத்தி போட்டி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு அமைய 8 கிலோகிராம் தரமான தேயிலை பறித்தே முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

அவருக்கு 6 லட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபா பணப்பரிசும், தங்கப்பதக்கமும் 43 இன்ச் அங்குலம் கொண்ட ஸ்மார்ட் டிவி ஒன்றும் (inch smart tv) சான்றிதழும் மற்றும் தங்க பதக்கமும் வழங்கப்பட்டது .

மேலும் ஒரு இலட்சம் ரூபாய் பணப்பரிசு மூவருக்கும் 75 ஆயிரம் ரூபாய் பணப்பரிசு மூவருக்கும் முறையே தங்கம் ,வெண்கலம், வெள்ளி பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது .

வருட வருடம் குறித்த போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன தேயிலை துறையின் எதிர்கால இருப்பினை தக்க வைக்கும் முகமாகவும் தொழிலாளர்களை ஊக்கப்படுத்தவதற்காகவும்  உட்சாகப்படுத்துவதற்காகவும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இவ் தேயிலை பறிக்கும் போட்டியில் ஹேலிஸ் பெருந்தோட்ட கம்பனியின்,  கௌனி வெளி  பெருந்தோட்ட கம்பனி, தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனி, ஹொரண பெருந்தோட்ட கம்பனி ஆகியவற்றின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தோட்டங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட  போட்டியாளர்கள் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டனர்.

இந்தப் போட்டி நிகழ்விற்குப் பிரதம அதிதியாக ஹேலிஸ் நிறுவனத்தின் தலைவர் மொகான் பண்டித்தகே, ஹேலிஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் டாக்டர் ரொஷான் ராஜதுரை, உட்பட நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் தோட்ட முகாமையாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிட்டுள்ளது.