வெடிப்பொருட்களை வைத்திருந்தவருக்கு சிறைத் தண்டனை

295 0

court (1)விடுதலைப் புலிகளின் வெடிப்பொருட்களை வைத்திருந்த நபரொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மூன்று மாத சிறைத்தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது.குறித்த விடயம் தொடர்பிலான விசாரணை இன்று (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஐராங்கனி பெரேரா குறித்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

ஆயுதங்களை வைத்திருந்த குற்றத்திற்காக குற்றவாளியை அதிகபட்சமாக 7 வருடங்கள் மாத்திரமே சிறையில் வைக்கமுடியும் எனவும் குறித்த குற்றவாளி ஏற்கனவே 8 வருடங்கள் சிறையில் உள்ள நிலையில் அவருக்கான தண்டனை 3 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளதென நீதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.இதேவேளை மீண்டுமொருமறை இவ்வாறான குற்றங்களில் ஈடபட வேண்டாம் என குற்றவாளியை நீதிபதி எச்சரித்துள்ளார்.