இலங்கையின் 2025 வருமான இலக்கு அடையக்கூடியது

78 0

வரவு செலவு திட்டத்தில் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக்கொள்ள தேவையான வரி வருமான முறை தொடர்பில் தெரிவிக்கப்படாமல் இருக்கிறது. அதனால் தான் இலங்கையின் 2025 வருமான இலக்கு அடையக்கூடியது.

ஆனால் நீண்டகால சவால் இருப்பதாக சர்வதேச தரப்படுத்தல் நிறுவனமான பிச் நிறுவனம் தெரிவித்திருக்கிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை (25) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஏழாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தை பார்க்கும்போது இடது பக்கம் சிக்னல் விளக்கை எரியவிட்டு வலது பக்கம் திருப்புவது போன்றே இருக்கிறது. அரசாங்கம் நேராக சென்று குழியில் விழும் என்றே எனக்கு தெரிகிறது.

அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தின் பிரகாரம் 2025இல் அரசாங்கத்தின் மொத்த தேசிய உட்பத்தி 15.1 வீதமாக காணப்படுகிறது. அதேநேரம் மொத்த செலவீனம் 21.8 வீதமாக காணப்படுகிறது.

துண்டுவிழும் தொகை 6.7 வீதமாக காணப்படுகிறது. இது எமது நிதி உறுதிப்பாடு தொடர்பில் ஒரு கவலையை ஏற்படுத்துகிறது.

இலங்கையின் 2025 வருமான இலக்கு அடையக்கூடியது. ஆனால் நீண்டகால சவால் இருப்பதாக சர்வதேச தரப்படுத்தல் நிறுவனமான பிச் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

அதற்காக நீணட மற்றும் நடுத்தரமான சவால்மிக்க திசையை நோக்கியே நாங்கள் பயணிக்க வேண்டி இருக்கும் என்ற எச்சரிக்கையை எதிர்வு கூறி இருக்கிறது.

2025ஆம் ஆண்டுக்கான வருமானத்தை நாங்கள் அடையக்கூடும் ஆனால் துண்டுவிழும் தொகை சவாலுக்குட்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதேநேரம் இறக்குமதியை தாராலமயமாக்குவதும் தாக்கத்தை ஏற்படு்தும் எனவும் பிச் தரப்படுத்தல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

அத்துடன் ஓய்வூதிய சம்பள அதிகரிப்பு தொடர்பாகவும் பிச் நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது. அதாவது, இது நிதி வசதி அளிக்கப்படாத முறையாக இருக்கிறது.

திரட்டு நிதியில் இருந்து ஒதுக்கப்படும்போது இதுவும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அதனால் இந்த ஓய்வூதியம் தொடர்பில் மூலாேபாய மாற்றம் தேவைப்படுகிறது.

அதேநேரம் தற்போது ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இதில் கட்டம் கட்டமாக மாற்றம் இடம்பெற வேண்டும்.  அதேநேரம் தனியார் துறையினரும் ஓய்வூதிய நிதியத்துக்கு பங்களிப்பு செய்கின்ற வகையில் மாற்றம் இடம்பெற வேண்டும்.

அதேபோன்று தனியார் ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.இதன் மூலம் அரசாங்கத்தின் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு பணவீக்கம் குறைவடையும் என பிச் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஆனால் அரசாங்கம் புதிய திசையை நோக்கி பயணிப்பதாக பிரதமர் தெரிவித்திருந்தார். ஆனால் இவ்வாறான திசையை நோக்கியா பயணிக்கிறது என கேட்கிறேன்.

அரசாங்கம் வேண்டுமென்றே ஓய்வூதியத்தை அதிகரித்தல் போன்ற விடயங்களை மேற்கொள்ளக்கூடாது.அவ்வாறு இல்லாமல் வெவ்வேறான விடயங்களை கையாள முடியுமா என பார்க்க வேண்டும் என்றார்.