“கணேமுல்ல சஞ்சீவ” சுட்டுக்கொலை ; சந்தேக நபர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணை

160 0
கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் புதன்கிழமை (19) பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகக் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு இன்று வியாழக்கிழமை (20) அறிவித்துள்ளனர்.

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் சட்டத்தரணி வேடத்தில் சென்று “கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திய பிரதான சந்தேக நபரும், சந்தேக நபர் தப்பிச் செல்வதற்கு உதவி செய்த வேன் சாரதியுமே இவ்வாறு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.