இலங்கை தனிமைப்பட்ட நிலையில் இருக்க முடியாது ஏனைய நாடுகளுடன் ஈடுபாடு அவசியம்

163 0
இலங்கை தனிமைப்பட்ட நிலையில் இருக்க முடியாது. இலங்கை ஏனைய நாடுகளுடன் ஈடுபாட்டை பேணுவது அவசியம் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை (20) இடம்பெற்ற இனொவேசன் ஐலண்ட் உச்சிமாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

முதலாவதாக இலங்கை ஒரு பெரும்மாற்றத்தின் தருணத்தில் உள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இரண்டு தேர்தல்களின் மூலம் மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் அபிலாசைகள் தொடர்பில் புதிய விதத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

கொவிட் பெருந்தொற்றும் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியும், பல தசாப்தங்களாக இலங்கையர்கள் எதிர்பார்த்த மாற்றங்களிற்கான தேவைகளை வெளிப்படுத்தியுள்ளன.

உலகின் வேறு எந்த நாட்டையும் போல இலங்கையும் தனித்து செயற்படமுடியாதுஇஉலகளாவிய இணைப்பும்இஒன்றையொன்று சார்ந்திருந்தல் ஆகியன இந்த பூகோளமயமாக்கல் யுகத்திலும் கூட ஒருவிதிமுறைiயாக உள்ளது.

வெளிநாட்டு சந்தையாகயிருந்தாலும்சரி அல்லது முக்கிய இறக்குமதிகள் சுற்றுலாதுறையாகயிருந்தாலும் சரி முதலீடு மற்றும் தொழில்நுட்பமாகயிருந்தாலும் சரி இ இலங்கை ஏனைய நாடுகளுடன் ஈடுபாட்டை பேணுவது அவசியம்.

இதற்கு உலகின் போக்குகளை சரியாக புரிந்துகொள்ளும் திறன் அவசியம்.