இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (20) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
பொலன்னறுவை, மாதுறு ஓயா பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் காட்டு யானை ஒன்று தவறி விழுந்துள்ளது.
இதனால் பிரதேவாசிகள் சிலர் இணைந்து கால்வாயில் விழுந்த காட்டு யானையை மீட்பு கரைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
இதன்போது இந்த காட்டு யானையானது திடீரென குழப்பமடைந்துள்ள நிலையில் கால்வாய்க்கு அருகில் உள்ள திம்புலாகல வெஹெரகம கிராமத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த இருவரை பலமாகத் தாக்கியுள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
82 வயதுடைய மூதாட்டியும் 74 வயதுடைய முதியவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

