மித்தேனிய கொலை- கொல்லப்பட்டவர் ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கனமானவரா?

106 0

மித்தேனிய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்ட 39 வயது நபர் கஜா என அழைக்கப்படும் அருண விதானகமகே என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவருக்கு எதிராக மிரட்டி பணம் பறித்தல் உட்பட ஏனைய குற்றச்சாட்டுகள்இருந்தன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

18ம் திகதி இரவு இவர் மோட்;டார் சைக்கிளில் தனது இரண்டு பிள்ளைகளுடன் பயணித்துக்கொண்டிருந்தவேளை சுடப்பட்டார்.கடவத்தை சந்திக்கு அருகில் 10.15 அளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்,படுகாயமடைந்த அவரது ஆறு வயது மகளும் 9 வயது மகனும் தங்காலை எம்பிலிப்பிட்டிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர், தங்காலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சில நிமிடங்களில் மகள் உயிரிழந்தார்,காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மகன் பின்னர் உயிரிழந்தார்.

கொல்லப்பட்டவரின் மனைவி வெளிநாட்டில் வசிக்கின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொல்லப்பட்டவர் ஊடகவியலாளர் சமுடித்த சமரவிக்கிரமவுடனான  யூடியுப் நேர்காணல்  ஒன்றின் போது ராஜபக்ச குடும்பத்தின் நண்பன் என தன்னை அடையாளம் காட்டியிருந்தார்.

அந்த பேட்டியில் இலங்கையில் பெரும் குற்றவாளி கும்பலொன்று இயங்குவதாக தெரிவித்திருந்த அவர் அதிகாரிகள் அந்த குற்றவாளி கும்பலிற்கு ஆதரவளிக்கின்றனர் தனது உயிருக்கு ஆபத்து என தெரிவித்திருந்தார்.

விதானகமகே ஆயுதங்களை வைத்திருந்தார்,தினமின தெரிவித்துள்ளது.

இந்த நபருக்கு மகிந்த குடும்பத்துடன் நெருங்கிய உறவிருந்தது ஆனால் இவர் கைதுசெய்யப்பட்ட பின்னர் உறவுகள் பாதிக்கப்பட்டன என தினமின தெரிவித்துள்ளது.

யூடியுப் பேட்டியில் ராஜபக்ச குடும்பத்தினரின் சர்ர்பில் பல குற்றநடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவித்தவரே விதானகமகே.

முன்னாள் எஜமான்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்ட பின்னர் தான்சிறையிலிருந்தவேளை தன்னை கொலை செய்வதற்காக ஒருவரை நியமித்திருந்தனர் என இவர் தெரிவித்திருந்தார்.