இந்திய பல்கலைக்கழக மாணவன் ஒருவன் நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று கண்டி பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.
இது பற்றித் தெரிய வருவதாவது,
இந்திய பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்று கடந்த 16 ஆம் திகதி கண்டி மெனிக்ஹின்ன, குண்டசாலை, தம்பராவ பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு தங்குவதற்காகச் சென்றுள்ளனர்.
இதன்போது, அவர்களில் ஒரு மாணவன் விடுதியில் உள்ள நீச்சல் தடாகத்தில் விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 18 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
26 வயதான சந்தோஷ் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

