கடந்த ஆண்டு நாய்க்கடியால் 180,000 பேருக்கு வைத்தியசாலைகளில் சிகிச்சை

102 0

2024 ஆம் ஆண்டில் சுமார் 184,926 பேர் நாய்க்கடியால் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நாய்க்கடிக்கு இலக்காகி காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசாங்கம் 850 ரூபாவிலிருந்து 1,000 மில்லியன் ரூபா வரை செலவிட்டுள்ளதாக நளிந்த ஜெயதிஸ்ஸ இன்று வியாழக்கிழமை (20) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப்பின் கேள்விக்கு பதிலளித்தபோது இவ்வாறு கூறிய அமைச்சர், கடந்த ஆண்டு கம்பஹா மாவட்டத்திலேயே நாய்க்கடி சம்பவங்கள் அதிகமாக பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.