அதானியைத் தாக்கிய ஜனாதிபதி

123 0

புதுப்பிக்கத்தக்க சக்தித் திட்டத்திலிருந்து அதானி குழுமம் விலகியதைக் குறிப்பிடும் முகமாக, அலகொன்றுக்கு அதானி குழுமத்தால் மதிப்பிடப்பட்ட 0.08 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் நியாயமானதா என்று தனது வரவு செலவுத் திட்ட உரையின்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வினவினார்.

இலங்கையை விட்டு அதானி குழுமம் வெளியேறியது தொடர்பான சிலரின் கரிசனைகளுக்கே ஜனாதிபதி திஸாநாயக்க பதிலளித்திருந்தார்.

எந்தவொரு நாடென்றாலும் மிகக் குறைந்த தொகையை மதிப்பிடுபவர்களுக்கே மீளப்புதுப்பிக்கத்தக்க சக்தித் திட்டங்களை தனது அரசாங்கம் வழங்குமென்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மிகக் குறைந்ததாக அலகொன்றுக்கு 0.04 ஐக்கிய அமெரிக்க டொலர்களை மதிப்பிட்ட உள்ளூர் நிறுவனமொன்றுக்கு திட்டமொன்று வழங்கப்பட்டதாக ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.