தம்மென்னாவ வனப்பகுதியில் 8,516 கஞ்சா செடிகள் கைப்பற்றல்!

86 0
அம்பாந்தோட்டை, தம்மென்னாவ வனப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (16)  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது  8,516 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு  நடவடிக்கையின் போதே இந்த கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபரை கைது செய்வது தொடர்பில் அம்பாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.