ஆந்திரா – தெலுங்கானா கவர்னராக நரசிம்மன் நீடிப்பு

581 0

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில கவர்னரான நரசிம்மன் பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்தது. அவரது பதவி காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆந்திரா மாநிலம் பிரிவினைக்கு முன்பு 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் கவர்னராக நரசிம்மன் நியமிக்கப்பட்டார். 2007-ம் ஆண்டு சத்தீஷ்கர் கவர்னராக இருந்த நரசிம்மனிடம் கூடுதல் பொறுப்பாக ஆந்திர கவர்னர் பதவி வழங்கப்பட்டது.

அதன் பின் 2010-ம் ஆண்டு ஆந்திரா மாநில முழு நேர கவர்னராக நியமனம் செய்யப்பட்டார். ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் உதயமானது. இரு மாநிலங்களுக்கும் நரசிம்மனே கவர்னராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் இரு மாநில பொறுப்புகளையும் கவனித்து வருகிறார். இரு மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளை பேசி தீர்த்து வைக்கிறார். மேலும் இரு முதல்- மந்திரிகளுக்கும் இணக்கமாக உள்ளார்.

இந்த நிலையில் கவர்னர் நரசிம்மன் பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்தது. அவரது பதவி காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கவர்னராக நியமிக்கப்பட்ட நரசிம்மனுக்கு பா.ஜனதா அரசு பதவி நீட்டிப்பு வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.